Column Left

Vettri

Breaking News

கல்முனையில் ஓர் இலக்கிய சந்திப்பு




கல்முனையில் ஓர் இலக்கிய சந்திப்பு ( காரைதீவு வேதசகா) கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் ஏற்பாட்டில், இலக்கியச் சந்திப்பொன்று கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்த இலக்கியச்சந்திப்பில், கல்முனைப் பிராந்தியத்தைச் சேர்ந்த கலைஞர்களான வைரமுத்து கணேசன் ( சேனைக்குடியிருப்பு), சதானந்தம் ரகுவரன் (கோட்டைக்கல்லாறு), சண்முகம் சுந்தரராஜன் (சேனைக்குடியிருப்பு) ஆகியோர் தத்தமது காத்திரமான இலக்கிய அனுபவப் பகிர்வுகளை பகிர்ந்தனர். இலக்கியச் சந்திப்பிற்கு சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமை வகித்தார். எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மைய ஸ்தாபகர் புவி.கேதீஸ்ஸின் வழிகாட்டலில், செயலாளர் கே.சாந்தகுமார், பொருளாளர் என்.அருளானந்தம், திட்டமிடல் பணிப்பாளர் ப.சந்திரமோகன் ஆகியோர் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள, இளம் ஊடகவியலாளர் ரிஷி வீடியோ படப்பிடிப்பை மேற்கொண்டார்.

No comments