Column Left

Vettri

Breaking News

நாளை நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் !




நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் ; இன்று எண்ணெய் காப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்று பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது. ஆலயத்தை அழகுற நிருமாணித்த அவுஸ்திரேலியாவில் வாழும் நிந்தவூரை பூர்வீகமாக கொண்ட இராமலிங்கம் ரவீந்திரதேவன் தலைமையில் இம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறுகிறது. கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெறும் இப் பெருவிழாவின் தொடக்கமாக கடந்த வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகின . இன்று (04.04.2026) சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

No comments