காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்ச குண்டபக்ஷ மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.23 மணி முதல் 11.28 வரையிலான சுபமுகூர்த்த வேளையில் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக பிரதம குரு சிவாகம வித்யா பூஷணம்,சிவாச்சார்ய திலகம், விபுலமணி சிவஸ்ரீ சண்முக மகேஷ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேக கிரியைகளை நடாத்துகிறார்கள்.
இதன்படி, எதிர்வரும்
20.04.2026 (திங்கட்கிழமை) அன்று கிரியைகள் ஆரம்பமாகின்றன.
அதனைத் தொடர்ந்து,
21.04.2026 செவ்வாய்க்கிழமை மற்றும் 22.04.2026 புதன்கிழமை ஆகிய நாட்களில் எண்ணெய்க் காப்பு சாத்துதல் நிகழ்வு காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது .
கும்பாபிஷேகமன்று அமரர் பரமலிங்கம் குடும்பத்தினர் அன்னதானம் வழங்கவுள்ளனர்.
தொடர்ந்து மண்டலாபிஷேக திருவிழாக்கள் நடைபெற்று இறுதியில் சங்காபிஷேகம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
No comments