கோமாரி பாலத்தில் சோலர் பல்புகள்
கோமாரி பாலத்தில் சோலர் பல்புகள்!
( வி.ரி.சகாதேவராஜா)
அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் உள்ள கோமாரி பாலத்தடியில் முதன்முதலாக இரண்டு சூரிய மின் விளக்குகள்( Solar powered street lamps) பொருத்தப்பட்டுள்ளன.
பொத்துவில் பிரதேச சபையின் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கோமாரி உறுப்பினர் த.சுபோதரன் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக, பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.எம்.முசாரப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
முதலைகள் பரவலாக உலாவும் இந்த கோமாரிப் பாலத்தடியில் இதுவரை காலமும் மின் விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருந்தது.
தற்போது இரவு வேளைகளில் இப்பாலத்தடி பகல் போல பிரகாசிக்கின்றது.
மக்கள் இச் செயற்பாட்டிற்கு வரவேற்பு தெரிவிப்பதோடு நன்றியும் கூறுகின்றனர்.
No comments