அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கௌரவிப்பு.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கௌரவிப்பு.
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசியப் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (06) காலை
பாடசாலையின் அதிபர் ஜே.ஆர். டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அனைத்து துறைகளிலிருந்தும் பல்கலைக்கழகத்திற்குதெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இப் பாடசாலையில் இருந்து 73 க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் விசேடமாக 05 மாணவர்கள் மருத்துவப் பீடத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும், மருத்துவத் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ரமேஷ் தேட்ஷித் இப் பாடசாலையை சேர்ந்தவர். அத்துடன் வர்த்தகப் பிரிவில் மாவட்ட நிலைகளில் 3 மற்றும் 8ஆம் இடங்களையும் மாணவர்கள் பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயம் மாகாண அளவில் 3ஆம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
அதேவேளை, கலைப்பிரிவில் 48 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி, அவர்களில் 27 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர். மொத்தத்தில், 75% இற்கும் அதிகமான சித்தி வீதத்துடன் 73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். உதயகுமார், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் திரு. ஏ. நசீர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. சோ. செல்வம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க (SDC) உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர்.
இம்மாணவர்களின். சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் ,பிரதி அதிபர்கள், கோட்டக்கல்வி அதிகாரி , மற்றும் வலயக்கல்வி அதிகாரிகளுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்விற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கமும், பழைய மாணவர் சங்கமும் அனுசரணை வழங்கியிருந்தமைட குறிப்பிடத்தக்கது.
செல்வி வினாயகமூர்த்தி
No comments