Column Left

Vettri

Breaking News

வீதி போக்குவரத்து, பாதுகாப்பு குறித்து பொலிஸார் விழிப்புணர்வு நிகழ்வு.




வீதி போக்குவரத்து, பாதுகாப்பு குறித்து பொலிஸார் விழிப்புணர்வு நிகழ்வு. வீதி போக்குவரத்து மற்றும் வீதி விபத்துக்களைத் தடுக்க, போக்குவரத்து பொலிசாரால் நாடு முழுவதும் விழிப்புணர்வுச் செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.அந்த வகையில் அக்கரைப்பற்று,திருக்கோவில்,பொத்துவில் ,இறக்காமம் நிந்தவூர் ஆகிய பொலிஸ்பிரிவில் உள்ள வீதிபோக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பில் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள். மற்றும் உறுப்பினர்கள் ,மற்றும் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள், வீதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் , பங்குபற்றுதலுடன் விழிப்புணர்வு நிகழ்வு அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி.நுவான் தந்தநாராயண, தலைமையில்(07) செவ்வாய்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது வீதி போக்குவரத்து தொடர்பான அடிப்படை விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது குறிப்பாக.உந்துருளிகளில் பயணம் செய்யும் இளைஞர்களின் பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம்,பெண்கள் உந்துருளிகளில் ஒரு பக்கமாக இருந்து பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்,வாகனங்களில் உள்ள பக்க கண்ணாடிகள் டயர்கள் என்ஜின்கள் வாகனங்களில் சமிஞ்சை விளக்குகள் , ஒலிகள் போன்றவற்றை கண்காணிக்கும் முறைகள் ஆசனப்பட்டி அணியாமல் செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள் போக்கு வரத்து ஒழுங்கில் பின் பற்ற வேண்டிய நடைமுறைகள் பாதசாரி கடவையில் வாகன சாரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றிய தெளிவூட்டல் நுவான் தந்த நாராயண அவர்களினால் தெளிவூட்டப்பட்டதுடன் வீதிப்பொலிசாருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. அத்துடன் இலங்கையில் பல் வேறு பகுதிகளிலும் இடம் பெற்ற வீதி விபத்துக்கள் அதன் பாதிப்பு விதிமுறை மீறல்கள் என்பன காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது. அத்துடன். மாணவர்களின் பாதுகாப்பு,போதைப்பொருள் தடுப்பு தொடர்பிலும் குறித்த பிரதேசங்களில் காணப்படும் வீதிகளின் குறைபாடுகள் ,வீதிகளின் இருமருங்கிலும் உள்ள சமிஞ்சை விளக்குகளின் முக்கியத்துவம், வீதி போக்குவரத்துக்கு தடையாக உள்ள மரகிழைகள் அகற்றுவது தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் அதற்குரிய தீர்வுகளாக குறித்த துறைகளுக்கு பொறுப்பாக வருகை தந்திருந்த அரச அரசசார்பற்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டறிந்து கொண்டதுடன் அடுத்துவரும் கூட்டங்களில் இதற்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். செல்வி வினாயகமூர்த்தி

No comments