Column Left

Vettri

Breaking News

கல் ஓயா ஆற்றுப் பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது




கல் ஓயா ஆற்றுப் பகுதியில் கசிப்புடன் ஒருவர் கைது பாறுக் ஷிஹான் கல் ஓயா ஆற்றுப் பகுதியில் செங்கல் வாடி என்ற பெயரில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை தலைமையக பொலிஸாரின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கல் ஓயா பாலத்திற்கு அடியில் பணப்பரிமாற்றம் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கல் ஓயா ஆற்றுப் பகுதியில் செங்கல் உற்பத்தி நிலையம் (செங்கல் வாடி) என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் போது அம்பாறை சேனநாயக்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 90,000 மில்லி லீட்டர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த நபர் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபடுவது போல் நடித்து, அதன் மறைவில் நீண்டகாலமாக கசிப்பு காய்ச்சும் தொழிலை முன்னெடுத்து வந்துள்ளார்.என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாவது, காய்ச்சப்படும் ஒரு போத்தல் கசிப்பு 1,500 ரூபா வீதம் மூன்று நபர்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டு வந்துள்ளது. இதற்கான பணப் பரிமாற்றங்கள் இரவு வேளைகளில் கல் ஓயா பாலத்திற்கு அடியில் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்று வந்துள்ளமை பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவ்விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸாரின் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டுள்ளதுடன் கைதான சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments