Column Left

Vettri

Breaking News

நாவிதன்வெளி பிராந்தியத்தில் முதல் சட்டத்தரணி ஜனுஷா! குவியும் வாழ்த்துக்கள்!!




( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தின், நாவிதன்வெளி பிராந்தியத்தில் முதல் சட்டத்தரணியாக  ஜனுஷா விக்னராசா தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

நாவிதன்வெளி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கற்று சிறப்பு சித்தியெய்தி முதல் சட்டத்துறை மாணவியாக ஜனுஷா விக்கினராசா தெரிவாகி இருந்தார்.

நாவிதன்வெளி ஏழாம் கிராமத்தைச் சேர்ந்த செல்வி ஜனுஷா,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை  நிறைவு செய்து சட்டத்துறையில் பட்டம் பெற்ற முதல் மாணவியாக 7ம் கிராமத்துக்கும், நாவிதன்வெளி பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவருக்கு பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவரது சாதனையையொட்டி சரமாரியாக வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

No comments

Subscribe Us