Column Left

Vettri

Breaking News

அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி தெரியுமா?




அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி தெரியுமா? இலங்கையில் சமகாலத்தில் நடைமுறையில் உள்ள அரசாங்கமத்தின் அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டம் பற்றி அறிந்திருக்கிறீர்களா? இல்லையெனில் அதனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழு விபரங்கள் இங்கு கேள்வி பதில் வடிவில் தரப்பட்டுள்ளன. 1.அஸ்வெசும என்றால் என்ன? குறைந்த வருமானம் பெறும் மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இது சமுர்த்தி திட்டத்திற்குப் பதிலாக மிகவும் வெளிப்படையான முறையில் தகுதியானவர்களைத் தெரிவு செய்ய உருவாக்கப்பட்டது. 2.யார் விண்ணப்பிக்கலாம்? அன்றாட உணவிற்கே சிரமப்படும் நிலையில் உள்ள மிகவும் ஏழ்மையான குடும்பங்கள். குறைந்த வருமானம் மற்றும் அடிப்படை வசதிகள் அற்ற ஏழ்மையான குடும்பங்கள். தற்காலிகமாக நிதி நெருக்கடியில் உள்ள பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள். விசேட உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகள். 3. எப்படி விண்ணப்பிப்பது? இணையதளம்: www.wbb.gov.lk என்ற இணையதளம் ஊடாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நேரடியாக: உங்கள் பிரதேச செயலகம் அல்லது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று சமர்ப்பிக்கலாம். தேவையானவை: விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள். 5. தகுதியற்றவர்கள் யார்? நிரந்தர அரச வேலை மற்றும் நிலையான அதிக மாத வருமானம் கொண்டவர்கள். சொகுசு வாகனங்கள் அல்லது அதிக மதிப்புள்ள சொத்துக்கள் வைத்திருப்பவர்கள். குடும்ப வருமானம் நிர்ணயிக்கப்பட்ட மட்டத்தை விட அதிகமாக இருப்பவர்கள். விண்ணப்பத்தில் தவறான தகவல்களை வழங்கியவர்கள். முக்கிய குறிப்பு: 2026-ஆம் ஆண்டிற்கான தரவுகளை சரிபார்த்தல் (Re certification) பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வி.ரி.சகாதேவராஜா.

No comments