Column Left

Vettri

Breaking News

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதிக்கு  எதிரான வழக்கு மறுதவணை விதிப்பு




அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான வழக்கு மறுதவணை விதிப்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயலட்சுமி டி சில்வாவிற்கு எதிரான வழக்கு இன்று (11) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கானது புதன்கிழமை(11) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை குறித்த இவ்வழக்கில் சந்தேகநபரான நீதிபதியிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசாரின் வழக்குக் கோவை சட்ட ஆலோசனைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வழக்குத் தொடுநரான பெரியநீலாவணைப் பொலிசார் நீதிமன்றிற்குத் தெரிவித்தனர். இவ் வழக்கானது மீண்டும் 11.03.2026 அன்று சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் அழைக்கப்பட திகதியிடப்பட்டுள்ளது.

No comments