Column Left

Vettri

Breaking News

இலங்கை கிழக்கின் Zee Tamil 'சரிகமபா புகழ் Sapesh Sapesan அவர்களுக்கான ஆலையடிவேம்பு பிரதேச கௌரவிப்பு விழா




இலங்கை கிழக்கின் Zee Tamil 'சரிகமபா புகழ் Sapesh Sapesan அவர்களுக்கான ஆலையடிவேம்பு பிரதேச கௌரவிப்பு விழா ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் மண்ணின் மைந்தன் சரிகமபா பாடகர் திரு.S.சபேசன் அவர்களை வரவேற்கும் மற்றும் கௌரவிற்கும் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் இந்து இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் Thiraviyaraj Rasarethinam அவர்களின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயல கலாச்சார மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது..... இவ் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் ஆலங்களின் அனுசரனையில் இடம்பெற்றது.... குறித்த நிகழ்வானது அக்கரைப்பற்று மருதையடி பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் மற்றும் ஆலயநிர்வாகத்தினரினால் மலை அணிவித்து வரவேற்பு ஆரம்பமாகி பின்னர் வாகன பவனியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் வரை அழைத்துவரப்பட்டு பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செலகத்தின் கலாச்சார மண்டபத்தில் பாடகர் சபேசன் அவர்களுக்கு கௌரவம் மற்றும் நினைவுச்சின்னம் மற்றும் வாழ்த்துபா என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்பும் ,ஊடக குழுவினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது... மேலும் சபேசன் அவர்களின் தாய் தந்தையரும் குறித்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்... அத்துடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடம் இடம்பெற்றதுடன் ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்களும் இவ் நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments