Column Left

Vettri

Breaking News

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காரைதீவில் புத்தாடைகள் வழங்கி வைப்பு!




தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காரைதீவில் புத்தாடைகள் வழங்கி வைப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காரைதீவு பிரதேசத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி மக்களுக்கு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவுக்கிளை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறிலின் ஏற்பாட்டில் ஜேர்மனியைச் சேர்ந்த சங்கரின் அனுசரணையில் இப்புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் த.மோகனதாஸ், மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments