Column Left

Vettri

Breaking News

IWMS Elocution, IAPS கல்வியகத்தின் 2025 ஆண்டிற்கான " Little Star Graduation & Felicitation Ceremony




 IWMS Elocution, IAPS கல்வியகத்தின் 2025 ஆண்டிற்கான " Little Star Graduation & Felicitation Ceremony ஆனது 2026 ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் திகதி சனிக்கிழமை விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் மாலை இரண்டு முப்பது மணி அளவில் திருமதி கஸ்தூரி.ஜெயகோபன் ஆசிரியர்,மற்றும் கல்வியக ஸ்தாபகர் திரு. சின்னத்துரை. ஜெயகோபன் தலைமையில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

 இதற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக, அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களும் கௌரவ அதிதியாக கௌரவத் தவிசாளர் சு .பாஸ்கரன்,தவிசாளர், பிரதேச சபை காரைதீவு அவர்களும், விசேட அதிதியாக திரு. ஆ. சஞ்சீவன் ,உதவி கல்விப் பணிபாளர், வலையக் கல்விப் அலுவலகம், கல்முனை மற்றும் கோட்டக்கல்விப்பணிப்பாளர், காரைதீவு அவர்களும் சிறப்பு அதிதிகளாக திரு.க. சதிஸ்சேகரன், உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலகம்,லாவுகல அவர்களும், திரு. ஆ.அரவிந்தன்,கணக்காளர் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, திருகோணமலை அவர்களும், எந்திரி ம. பிரதீபன் ,பிராந்திய பொறியியலாளர், விவசாய மேம்பாட்டுத்துறை, வவுனியா அவர்களும் எந்திரி M.மோஹன் சங்கர் , System Engineer , Gateway International College ,Kandy அவர்களும் , திரு ம. சுந்தரராஜன், அதிபர், கமு/கமு/விபுலானந்தா மத்திய கல்லூரி,காரைதீவு அவர்களும், திரு. ம. ஜீவராஜ்,நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கல்முனை வடக்கு அவர்களும், மேலும் பெற்றோர்களும், இக்  கல்வியகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்துக் கொண்டனர்.

 மேலும், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் இக்கல்வியத்தில் கற்கும் மாணவர்கள் பெரும் அதிர்ஷ்ட சாலிகள் காரணம் என்ன வெனில் 2019 ஆண்டு முதல் இக் கல்வியக செயற்பாடானது தற்கால கல்வி மாற்றங்களுக்கு ஏற்ப புதிய புதிய மாற்றங்களையும் உத்திகளையும் உடனுக்குடன்  ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தில் சிறந்த சமூகத்தை உருவாக்கக் கூடிய திறமையும் ஆற்றலும் கல்விய செயற்பாடுகளில் இருப்பதாகவும் மேலும்  வளர வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

 அத்துடன் அங்கு உரையாற்றிய  ஏனைய அதிதிகள் அனைவரும்  ஆங்கில கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பெற்றோர்களுக்கு தெளிவுப்படுத்தியதுடன், கல்வியகம் 2019 தொடக்கம் இன்று வரை பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும், இக் கல்வியகம் மென்மேலும் வளர்ந்து பல சாதனைகளை  எதிர்காலத்தில் புரிய வேண்டும் என வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொண்டனர். 

அத்துடன் கல்வியக மாணவர்களின் ஆங்கில புலமைகளை வெளிப்படுத்தும் பல கண்கவர் கலைநிகழ்வுகள் நடந்தேறியதுடன், கடந்த வருடம் IWMS Final Examination -2024, Radiant way Examination -2024 & Annual Dictation -2024 இல்சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பாராட்டி பரிசில்களும், கேடயங்களும் ,சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.














No comments