Column Left

Vettri

Breaking News

தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் பர்ஹாமிற்கு சபையில் பாராட்டு




தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் பர்ஹாமிற்கு சபையில் பாராட்டு பாறுக் ஷிஹான் மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் எழுந்த விமர்சனத்தினால் அரசாங்கத்தை பாராட்டியும் இடையிடையே விமர்சித்தும் காரைதீவு பிரதேச சபையின் அமர்வு இன்று நடந்தேறியது. காரைதீவு பிரதேச சபையின் புத்தாண்டின் முதல் அமர்வும் 04 ஆவது சபையின் ஏழாவது மாதாந்த சபைக் கூட்ட அமர்வும் இன்று (13) செவ்வாய்க்கிழமை பிரதேச சபையின் சபா மண்டபத்தில் சபையின் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் ஆரம்பமானது. பின்னர் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் உப தவிசாளர் முஹம்மது ஹனீபா முகம்மது இஸ்மாயீல் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பங்குபற்றலுடன் ஆரம்பமாகின. இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் தவிசாளர் உரையுடன் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் உரை என்பன தொடர்ச்சியாக இடம்பெற்றன. இதில் தவிசாளர் உரையின் போது காரைதீவுப் பிரதேசம் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள உக்கிரமான கடலரிப்பினால் கடற்கரைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனை அரசாங்கம் கண்டு கொள்வதாக இல்லை. அரச பிரதிநிதிகள் அருகிலுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்கின்றார்களே தவிர காரைதீவுக்கு வருகிறார்களில்லை. ஏன் இந்த பாரபட்சம்? என கேள்வி எழுப்பினார். இத தவிர கடலரிப்பினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் கடலோர பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலவரத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய தேசிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்க, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவீர,கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் மாகாண பொறியியலாளர் எம். துளசிதாசன் ,உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அரச அதிகாரிகள் கல்முனை கடற்கரைப் பகுதிகளுக்கு விஜயம் செய்தததாக ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். இதன் மூலம் கல்முனைஇ சாய்ந்தமருதுஇ மாளிகைக்காடுஇ நிந்தவூர் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அபாயத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததாக ஊடகங்களில் வந்தது.எனவே கடலரிப்புக்கான கல்லணை அரசபணியில் காரைதீவு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறதா? அரசின் கண்மூடித்தனமான அலட்சியமா?காரைதீவு முற்றாக புறக்கணிக்கப்பட்டுவருவது கடும் அரசியல் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அண்மைக் காலங்களில் கல்முனை, சாய்ந்தமருது,மாளிகைக்காடு,நிந்தவூர் போன்ற பகுதிகளில் அரசியல் பிரதிநிதிகள்,உயர் அதிகாரிகள் அணிவகுத்து வந்து அவசரமாக கற்கள் இடும் பணிகளை முன்னெடுத்துவரும் போது,அதே கடலோர வரிசையில் அமைந்துள்ள காரைதீவு மட்டும் ஏன் அரசின் பார்வைக்கு அப்பால் தள்ளப்பட்டிருக்கிறது? என்ற கேள்வி இன்று மக்கள் மத்தியில் உரத்த குரலாக ஒலிக்கிறது. அவர்கள் இங்கு வரும்போது எம்மை அழைப்பதில்லை. காரைதீவு பெரிய பாலம் திருத்த வேலை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு அழைக்கவில்லை. அதுபோல தொடர்ந்து புறக்கணிப்பு காட்டப்பட்டிருக்கிறது.அனைத்து மூவின குடிமக்களுக்கும் சம உரிமை, சம பாதுகாப்பு என்று அரசியல் மேடைகளில் முழங்கும் சமகால அரசியல் தலைமைகள்,காரைதீவு வந்தால் மட்டும் ஏன் மௌனமாகிவிடுகின்றன? கடலரிப்பு இனத்தைப் பார்க்குமா? மொழியைப் பார்க்குமா? ஆனால் அரசின் நடவடிக்கைகள் மட்டும் இனத்தையும் மொழியையும் பார்த்து செயல்படுகின்றனவா? என்ற கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.எனவே இனியாவது நீதியாக செயற்படுங்கள் என்றார். இதன் போது தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் பர்ஹாம் உட்பட உறுப்பினர்கள் பலரும் கடலரிப்பு தொடர்பாக பலவித கருத்துகளைக் கூறினர். இதில் தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் பர்ஹாம் குறிப்பிட்டதாவது அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள மையவாடி கடற்கொந்தளிப்பு காரணமாக தினமும் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.இம்மையவாடியில் மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது மக்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான கடலரிப்பு காரணமாக மனித எச்சங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட ஆரம்பித்துள்ளன.இது தொடர்பான தகவல்கள் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் பிரதேச சபை தவிசாளர் போன்ற அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் எனது முன்னோர்களின் ஜனாசாக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் முழு வீச்சில் இவ்விடயத்தில் மக்களுடன் இணைந்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட கரையேர பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவை அணுகி உடனடியாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் சம்பவ இடத்திற்கு சென்று 4 நாட்களாக கனரக வாகனங்களின் உதவியுடன் கல் அணைகளை தற்காலிகமாக இடைவிடாது செய்து முடித்ததுடன் அப்பிரச்சினைக்கு தற்காலிகமான தீர்வினை பெற்றுக் கொடுத்தேன் என சபையில் குறிப்பிட்டார். இதில் காரைதீவு பிரதேச சபையின் வகிபாகம் கிடைக்கவில்லை என ஆதங்கத்துடன் குறிப்பிட்ட அவர் இதன் போது பிரதேச சபையின் தவிசாளருக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் வரவில்லை என குற்றஞ்சாட்டினார்.ஆனால் சபையில் இடையில் குறிக்கிட்ட தவிசாளர் மறுநாள் தானும் அம்மையவாடிக்கு சென்று பார்வையிட்டதாகவும் துரதிஸ்டவசமாக சபை கனரக வாகனம் பழுதடைந்திருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் பார்வையிட வரும் போது தனக்கு அழைப்பு எதுவும் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார். இதே போன்று சபையின் உறுப்பினர்களும் மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள மையவாடி தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் அபூபக்கர் பர்ஹாம் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து மன்றில் தத்தமது உரையின் போது பாராட்டி உரையாற்றினர்.அத்துடன் இடையிடையே அரசாங்கத்தை ஒரு சில விடயங்களில் விமர்சித்தும் உரையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் மாதாந்த கூட்டம் நடத்த வேண்டிய திகதி தீர்மானித்தல் முன்மொழிவுகள் உள்ளடங்கலாக இக்கூட்ட அமர்வில் கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் பெறப்பட்டு சபை நடவடிக்கை சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments