இன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் உயர் கண்காணிப்பு சிகிச்சை(HDU) பிரிவு புத்தாண்டில் திறந்து வைப்பு
இன்று கல்முனை ஆதார வைத்தியசாலையில் உயர் கண்காணிப்பு சிகிச்சை(HDU) பிரிவு புத்தாண்டில் திறந்து வைப்பு
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வரலாற்றில், முதல் தடவையாக உயர் கண்காணிப்பு சிகிச்சை(High Dependency Unit) பிரிவு இன்று (1) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது .
கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் ஜி. சுகுணன் இப் பிரிவை ஆரம்பித்து வைத்தார் .
வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவு கட்டிடத்தின் ஒரு பகுதியில் புதிய சிகிச்சை பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது .
இந்த நிகழ்வில் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
இப் பிரிவு வைத்தியசாலை வரலாற்றில் முக்கிய மைல்கல் எனலாம். இது வைத்தியசாலையின் அர்ப்பணிப்பான சுகாதார பராமரிப்பு சேவைக்கு மேலும் வலுச்சேர்க்கும் என பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் ஜி. சுகுணன் தெரிவித்தார்.
மேலும், புத்தாண்டு கடமைகள் ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
No comments