Column Left

Vettri

Breaking News

நாவிதன்வெளியில் களைகட்டிய நத்தார் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் 




நாவிதன்வெளியில் களைகட்டிய நத்தார் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் (வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் நத்தார் கொண்டாட்டமும் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டமும் தவிசாளர் இ.ரூபசாந்தன் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. அருட் சகோதரர்களின் பங்குபற்றுதலுடன், முன்னெப்போதும் இல்லாத வகையில் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த கிறிஸ்துமஸ்–புத்தாண்டு நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்தர்ப்பத்தில், கடந்த கால எதிர்மறை அரசியல் எண்ணங்களை முழுமையாக மறந்து, புதிய மனிதர்களாக புத்தாண்டில் காலடி எடுத்து வைத்து, ஒற்றுமை அரசியலை அடிப்படையாகக் கொண்டு பிரதேசத்தின் வளர்ச்சிக்காக இணைந்து செயற்படுவோம் என தவிசாளர் இ.ரூபசாந்தன், உப தவிசாளர் கு.புவனரூபனா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உறுதியெடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர், அலுவலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

No comments