Column Left

Vettri

Breaking News

Fwd: கூடிப்பொங்கல் விழா அம்பாரை மாவட்டத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான இணைவாக!!




 ஆலையடிவேம்பு நிருபர்

(வி.சுகிர்தகுமார்)

 கூடிப்பொங்கல் விழா அம்பாரை மாவட்டத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான இணைவாக ஆலையடிவேம்பு ஸ்ரீ சிந்தமாணி விநாயகர் ஆலயத்தில் இவ்வருடம் சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் கூடிப்பொங்கல் வைத்து கொண்டாடுவோம் வாரீர் என ஆலய நிருவாக சபையினர் அழைத்ததற்கு அமைய ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்களுக்கு பொங்கல் பானைகளும் பொங்கலுக்கு தேவையான பொருட்களும் பிரதமகுரு சிவஸ்ரீ விநாயகமூர்த்தி குருக்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் பின்னராக பெண்கள் பொங்கலிடும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பூஜை வழிபாடுகளை ஆலய குரு சிவஸ்ரீ கிதுர்ச சர்மா நடாத்தி வைத்தார்.
தொடர்ந்து அடியவர்களுக்கு பிரசாதமும் கைவிசேடமும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேநேரம் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சூரிய பகவானுக்கான விசேட பூஜைகள் இடம்பெற்றன.
முன்னேற்பாடுகளில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments