Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் பிதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி வைப்பு




திருக்கோவில் பிதேச கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி வைப்பு.... ஜே.கே.யதுர்ஷன் தம்பிலுவில்... அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டது.... கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் மாவட்ட செயலகமும் திருக்கோவில் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கான 2025 ஆண்டு கலைஞர் சுவதம் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் நேற்றைய தினம் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோத்தர் திருமதி நிரோஜினி நவநீதன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.... குறித்த நிகழ்வில் முன்று கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் சுவதம் விருதும் வழங்கி வைக்கப்பட்டது மேலும் இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ஜெகராஜன் மற்றும்மாவட்ட கலாச்சார உத்தியோத்தர் T.M.றின்கான் திருக்கோவில் உதவிப்பிரதேச செயலாளர் அலுவலக உத்தியோத்தர்கள்,கலாச்சார உத்தியோத்தர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்

No comments