இன்று மல்வத்தை சீர்பாததேவி மாணவர்களுக்கு ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
( வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர் ( ஒஸ்கார் - Auskar) ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை இன்று (29) வியாழக்கிழமை வழங்கி வைத்தனர்.
பாடசாலை அதிபர் ஏ.சதானந்தா தலைமையில் நடைபெற்ற வித்தியாரம்பவிழாவில், அவுஸ்திரேலியா காரைதீவு ஒன்றிய (ஒஸ்கார் ) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் (ராஜன்) தலைமைத்துவத்தில், பொருளாளர் வீ.விவேகானந்தமூர்த்தியின் ஒருங்கிணைப்பில், வைத்திய கலாநிதி மருத்துவர் விவே.நுரோஜன் சுஜீவனி தம்பதியர் கற்றல் உபகரணங்களை வழங்க, அனுசரணை வழங்கியிருந்தனர்.
விழாவில் பிரதம அதிதியாக, ஒஸ்கார் இலங்கைப் பிரதிநிதியும் ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
மேலும், கௌரவ அதிதிகளாக ஒஸ்கார் பிரதிநிதிகளான ஆர்.ரத்னகுமார், ஏ.ஆனந்தசசு, ஆசிரிய ஆலோசகர் ஏஎம்.சாஜித் , கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.பிரதீபன் , மல்வத்தை விபுலானந்தா அதிபர் திருமதி கௌசல்யா
ஆகியோர் கலந்து கொண்டனர்
மல்வத்தை சீர்பாததேவி பாடசாலையில் இம் முறை 28 மாணவர்கள் தரம் ஒன்றில் இணைந்தனர். அவர்களுக்கு ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைத்தது.
மேலும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற இரு மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலைக்கும் உதவி வழங்கப்பட்டது.
விழாவில் பெற்றோர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
பிரதி அதிபர் திருமதி ஜெயந்தி தேவதாசன் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.
















No comments