கயிருடன் காணப்பட்ட தயிர்வடைகள் பறிமுதல்-சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சம்பவம்
கயிருடன் காணப்பட்ட தயிர்வடைகள் பறிமுதல்-சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சம்பவம்
பாறுக் ஷிஹான்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் இன்று(06) கொட்டும் மழைக்கும் மத்தியில் சோதனை செய்யப்பட்டுள்ளன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்ளின் பங்கேற்புடன் வீதியோர சந்தை மற்றும் பெண்கள் சந்தை (Ladies Market) பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன் போது அங்கு காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தப்பட்டதுடன் எதிர்காலத்தில் அடிக்கடி பரிசோதனைகள் நடைபெறும் என்பதனையும் தெரிவிக்கப்பட்டது.
இதே வேளை உணவகங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அதன் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்கின்மையுடன் காணப்பட்டதுடன் அதனை சரி செய்வதற்காக ஒரு வார காலம் அவகாசமும் வழங்கப்பட்டது.மேலும் இதில் நுகர்வுக்கு பொருத்தமற்ற கயிருடன் காணப்பட்ட தயிர்வடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
No comments