திரிபோசா வேலைத்திட்டத்தைக் கட்டியெழுப்புவதற்கு புதிய திட்டம்!!
திரிபோசா வேலைத்திட்டத்தைக் கட்டியெழுப்புவதற்கு உலக உணவுத் திட்டம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
அதற்கமைய, திரிபோசா உற்பத்திக்குத் தேவையான சோளத்தின் தரப்பண்பை அதிகரிப்பதற்கும், மற்றும் திரிபோசா விநியோகத்தை பலப்படுத்தும் நோக்கிலும் இலங்கையில் மேம்படுத்தப்பட்ட திரிபோசா வேலைத்திட்டத்திற்கான தாங்குதிறன் கொண்ட தரப்பண்புடன் கூடிய சோளத்தை அடிப்படையாகக் கொண்ட உணவு முறைமையைக் கட்டியெழுப்பல்: பயிரிடுவோம் கட்டியெழுப்புவோம்’ எனும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் கருத்திட்ட முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
உத்தேசக் கருத்திட்டத்தின் கீழ் அநுராதபுரம், மொனராகல மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 7,500 சோளச் செய்கையாளர்கள் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
ஒட்டுமொத்த கருத்திட்டத்திற்கு கொரியா சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்கியுள்ளது. 2025 – 2029 காலப்பகுதியில் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
No comments