இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் நுணுக்குக்காட்டி நிலையம் திறந்து வைப்பு!!
(பாறுக் ஷிஹான்)
இறக்காமம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களின் நலன்கருதி, இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் காசநோயைக் கண்டறிவதற்கான நுணுக்குக்காட்டி நிலையம் (Microscope Center) வியாழக்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.
இறக்காமம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் பைசுல் இஹ்சான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த நிலையத்தைத் திறந்து வைத்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனையின் கீழ், கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.அப்துல் கபூரின் வழிகாட்டல்களுக்கு அமைய இந்த நிலையம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.அப்துல் கபூர், பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எச்.எம்.டீ.மபாஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

காசநோய் பரிசோதனைகளுக்காக நீண்ட தூரம் பயணித்து பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிய இறக்காமம் பிரதேச மக்கள், எதிர்வரும் காலங்களில் தமது பிரதேச வைத்தியசாலையிலேயே பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
No comments