தம்பிலுவில் பகுதியில் வீடு ஒன்றில் தீவிபத்து உடைமைகள் சேதம்
தம்பிலுவில் பகுதியில் வீடு ஒன்றில் தீவிபத்து உடைமைகள் சேதம்...
ஜே.கே.யதுர்ஷன்
நிருபர் தம்பிலுவில்...
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்01 கிழக்கு கனகர் கிராமம் ஆதவன் மைதான வீதியில் பொங்கல் தினமான நேற்று மாலை சுமார் 7.00pm மணியளவில் வீடு ஒன்றில் திடிர் தீவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது..
குறித்த தீ விபத்தில் வீட்டின் கூரை சேதமடைந்ததுடன் மற்றும் வீட்டின் அறையில் இருந்த பெரும் தொகையான தளபாடப்பொருட்கள் என்பன தீயில் கருகீ சாம்பலாகியுள்ளது...
மேலும் உயிர் சேதம் ஒன்றும் இடம்பெறவில்லை.... குறித்த தீ விபத்துக்கான சரியான காரணமும் அறியப்படவில்லை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது சம்பவ தினமான நேற்று தைத்திருநாள் என்பதனால் வீட்டூன் உரிமையாளர்கள் வெளியில் உறவினர் வீட்டூக்கு சென்றுள்ளனர் வீட்டில் ஒரு சகோதரி மாத்திரமே இருந்துள்ளார் பின்னர் வீடு திரும்பிய வேளை வீடு தீவிபத்து ஏற்பட்டதை கண்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தனர்
பின்னர் குறித்த தீயினை பொதுமக்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தீயினை அனைத்து கட்டுப்பாட்டுக்கொண்டு வந்துள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்....
குறித்த விபத்து தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர்களூக்கும் அறிவித்தும் யாரும் வந்து வீட்டினை பார்வையிட வில்லை எனவும் வீட்டின் உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்
No comments