Column Left

Vettri

Breaking News

ABC Kida Block பாலர் பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு விழா.




ABC Kida Block பாலர் பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு விழா. ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை ABC Kida Block பாலர் பாடசாலையின் வருடாந்த பட்டமளிப்பு விழா இன்று (17) அல்-அஸ்ஹர் வித்தியாலயம் வளாகத்தில் கோலாகலமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். மேலும், மருதமுனை அக்பர் வித்தியாலயத்தின் அதிபர் AH. அலி அக்பர் அவர்கள் விசேட அதிதியாக பங்கேற்றார். பாலர் மாணவர்களின் கல்விப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்த இப்பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மாணவர்களின் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுடன், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனங்களில் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியதுடன் இந்நிகழ்வில் பிரதம அதிதி அவர்களுக்கு பாடசாலை சமூகத்தால் பொன்னாடை போர்த்தி கொளரவிக்கப்பட்டது. அதிதி தமது உரைகளில், சிறுவயதில் கல்வி, ஒழுக்கம், நற்பண்புகள் என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், எதிர்கால சமூகத்தை வழிநடத்தும் சிறந்த தலைமுறையாக மாணவர்கள் உருவாக வேண்டும் என வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினர். மொத்தத்தில், ஒழுங்குமுறை, உற்சாகம் மற்றும் உணர்ச்சிப் பூர்வமான தருணங்களுடன் கூடிய இவ்விழா, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரின் மனங்களிலும் இனிய நினைவாக பதியக் கூடியதாக அமைந்தது.

No comments