அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் 4000.00 பெறுமதியான வவுச்சர்கள் வழங்கி வைப்பு!!
( வி.ரி.சகாதேவராஜா)
அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் ( AUSKAR ) காரைதீவு விநாயகர் மீனவர் கூட்டுறவுச்சங்க உறுப்பினர்களின் பாடசாலை செல்லும் 18 பிள்ளைகளிற்கு கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான 4000.00 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு சங்கத்தின் செயலாளர் ர.சுஜீதன் தலைமையில் காரைதீவு வீரபத்திரர் அறநெறி பாடசாலை மண்டபத்தில் நேற்று முன்தினம் (8)நடைபெற்றது.
ஒஸ்கார் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ஒழங்கமைப்பில், காரைதீவினை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியாவினை வசிப்பிடமாகவும் கொண்ட ஒஸ்கார் போசகர் பொறியியலாளர் வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் இதற்கான பூரண அனுசரணை வழங்கியிருந்தார்.
ஒஸ்காரின் சிரேஸ்ட உறுப்பினர் ஆர்.பிரதீபராஜ் அங்கிருந்து இந்த செயற்றிட்டத்திற்கு இணைப்பாளராக செயற்பட்டார்.
நிகழ்வில் ஒஸ்கார் சிரேஸ்ட உறுப்பினர்களான த.கணேசநாதன் மற்றும் அ.மகேந்திரன் ஆகியோருடன் ஆர்.ரத்னகுமார், கே.பிரேமானந்தா,
கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.குமுதினி ஜெகதீசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மீனவர் சங்க சேவைக்காக தனது சொந்த நிதியில் 25 ஆயிரம் ரூபாயை வழங்க அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த சிரேஸ்ட உறுப்பினர் தம்பியப்பா கணேசநாதன் உறுதியளித்தார்.
இந் நிகழ்வில் கற்றல் உபகரணங்களிற்கான வவுச்சர்களை பெற்று கொள்ளும் மாணவர்கள் உட்பட மீனவர் சங்க நிர்வாக சபை உறுப்பினர்களோடு ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்..
















No comments