Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறை போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற 2026ம் ஆண்டிற்கான முதல் நாள் நிகழ்வு




சம்மாந்துறை போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற 2026ம் ஆண்டிற்கான முதல் நாள் நிகழ்வு பாறுக் ஷிஹான் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு, சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலியுறுத்தும் வகையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நான்கு மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பு வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (OIC) டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் தலைமையில் இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் கலந்து கொண்டு தத்தமது மத மரபுகளின்படி பிரார்த்தனைகளை நடத்தினர். சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள், காவல்துறை பணியாளர்கள் மற்றும் இராணுவ உறுப்பினர்கள் இணைந்து இதில் பங்கேற்றனர். புதிய ஆண்டை அமைதி, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் ஆரம்பிக்கும் நோக்கில் இந்த நான்கு மத பிரார்த்தனை நிகழ்வு நடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வு மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்ததாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். புதிய ஆண்டில் சம்மாந்துறை பிரதேசத்திலும் நாடு முழுவதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு நிலவ வேண்டும் என அனைவரும் இணைந்து பிரார்த்தித்தனர்.

No comments