Column Left

Vettri

Breaking News

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து உப தவிசாளர் எல் சமீம் மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு




இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து உப தவிசாளர் எல் சமீம் மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு பாறுக் ஷிஹான் இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் கேட்டுக் எல் சமீம் இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரமவை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று (01) இடம்பெற்ற இச்சந்திபின் போது, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது குறித்தும் கலந்து ஆலோசித்தார் இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் என்ற வகையில், இதன் போது பிரதானமாக இரண்டு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக உபதவிசாளர் கே எல் சமீம் தெரிவித்தார். இதன் படி கடந்த வருடம் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தன்னால் முன்வைக்கப்பட்ட அம்பாறை பொது வைத்தியசாலையில் தமிழ் மொழி மூல பிறப்புப் பதிவாளர் ஒருவரை நியமிக்கும் விடயத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து கொண்டார். அத்துடன் இறக்காமம் பிரதேச வைத்திய சாலையை தரமுயர்த்தல் விடயம் குறித்தும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்த கூட்டத்தில் இதற்கான முன்மொழிவை கொண்டு செல்லக் கூடிய சாத்தியங்கள் பற்றியும் அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சந்திப்பில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் ஜெகராஜனும் கலந்து கொண்டனர். இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து உப தவிசாளர் எல் சமீம் மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு பாறுக் ஷிஹான் இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் கேட்டுக் எல் சமீம் இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரமவை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று (01) இடம்பெற்ற இச்சந்திபின் போது, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இறக்காமம் பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது குறித்தும் கலந்து ஆலோசித்தார் இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் என்ற வகையில், இதன் போது பிரதானமாக இரண்டு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக உபதவிசாளர் கே எல் சமீம் தெரிவித்தார். இதன் படி கடந்த வருடம் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தன்னால் முன்வைக்கப்பட்ட அம்பாறை பொது வைத்தியசாலையில் தமிழ் மொழி மூல பிறப்புப் பதிவாளர் ஒருவரை நியமிக்கும் விடயத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து கொண்டார். அத்துடன் இறக்காமம் பிரதேச வைத்திய சாலையை தரமுயர்த்தல் விடயம் குறித்தும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்த கூட்டத்தில் இதற்கான முன்மொழிவை கொண்டு செல்லக் கூடிய சாத்தியங்கள் பற்றியும் அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சந்திப்பில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் ஜெகராஜனும் கலந்து கொண்டனர்.

No comments