Column Left

Vettri

Breaking News

காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் ஒன்றுகூடலும் கழக இரவும்




காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் ஒன்றுகூடலும் கழக இரவும் ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விளையாட்டு கழகத்தினதும், விபுலானந்தா சனசமூக நிலையத்தினதும் வருடாந்த ஒன்றுகூடலும் கழக இரவும் அண்மையில் கழக தலைமைக்காரியாலத்தில் கழகத்தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு அதிதிகள் பலரும் கலந்துகொண்டதுடன் கழக போசகர்களும் கழத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களும் பலரும் கனிஷ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இறைவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வுகளில் கழக உறுப்பினர்களில் கல்விச்சாதனையாளர் கௌரவிப்புகள் மற்றும் கழக உறுப்பினர்கள் விளையாட்டு துறைசார் வீரர் கௌரவிப்புகள் இட்ம்பெற்றன. மேலும் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவுகளும் இடம்பெற்றன. தலைவராக வை.கோபிகாந், செயலாளராக ஆர்.பிரகிலன், பொருளாளராக .வி.குகனேந்திரராஜா மற்றும் நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments