GIT பரீட்சைக்கான திததி அறிவிப்பு!!
சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தரம் 12 மாணவர்களுக்கான 2025 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையை 2026 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை அறிவித்துள்ளார்.
இடர் நிலைமைக்குட்பட்ட பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாதிருப்பின் தமது பாடசாலை அதிபருக்கு அறிவிக்க வேண்டும்.
அதிபர்கள் தமது பாடசாலைப் பரீட்சார்த்திகள் இடர் நிலைமைக்குட்பட்டிருப்பின் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர், பரீட்சை ஆணையாளர் (பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேறு) ஆகியோருக்கு அறிவிக்க வேண்டும்.
No comments