கர்ப்பிணித் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு!!
பேரிடர் நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5000/= மதிப்புள்ள ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கொடுப்பனவு ஒருமுறை மாத்திரமே வழங்கப்படவுள்ளதாகவும், 2025 நவம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாய் சேவை நல நிலையங்களில் (Maternal Clinics) பதிவு செய்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடுப்பனவு டிசம்பர் 16 ஆம் திகதி முதல் பிரதேச செயலகங்களூடாக ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சுடன் இணைந்த தேசிய ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி செயலகத்தின் நிகழ்ச்சித் திட்டமாக இது அமுல்படுத்தப்படுகிறது.
No comments