Column Left

Vettri

Breaking News

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி வீதம் 5.4% ஆக அதிகரிப்பு!!




 சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் (DCS) வெளியிட்ட அறிவிப்பின்படி, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி வீதம் 5.4% ஆகப் பதிவாகியுள்ளது.

இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பதிவான 4.9% நேர்மறை வளர்ச்சி வீதத்தை விட அதிகமாகும்.

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான இந்த 5.4% வளர்ச்சி வீதம், நாடு முன்பு சந்தித்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி வருவதை குறிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments