இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல்மயமாக்கும் செயல்முறைக்கு அமைச்சரவை ஒப்புதல்!!
இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல்மயமாக்கும் செயல்முறையான ஈ-நீதிமன்றம் ((e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல்மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை உத்தியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஜிட்டல் உருமாற்றச் செயல்பாட்டின் ஆரம்ப கட்டமாக, தற்போது உயர் நீதிமன்றம் அதன் வழக்கு நிர்வாகத்திற்காக ஒரு இணையதளம் மற்றும் தொடர்புடைய மின்னணு முறைமையை (e-CMS) அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கு கல்வி, உயர் கல்வி, தொழில்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
………..
நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட 6,000 மில்லியன் ரூபாய்கள் நிதிப் பங்களிப்பைப் பயன்படுத்தி, நெல் சந்தைப்படுத்தல் சபை கடந்த சிறு போகத்தில் கொள்வனவு செய்த நெல் இருப்பு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தொடர்ச்சியான அரிசி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, இந்த நெல் இருப்பு 2025 ஆம் ஆண்டில் நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் அரிசியாக்கப்பட்டு, லக் சதொச மற்றும் கூட்டுறவு வலையமைப்பின் மூலம் சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments