மலையக மக்களுக்கான நன்றிக் கடனே இது! ஒஸ்கார் தலைவர் ராஜன் கூறுகிறார்!
( வி.ரி. சகாதேவராஜா)
நாங்கள் 2004இல் பாரிய ஆழிப்பேரலையை எதிர்கொண்ட பொழுது முதன் முதலில் எமக்கு வந்து உதவியது மலையக மக்களே. குறிப்பாக கலாநிதி சிவப்பிரகாசம் தலைமையிலான மனித அபிவிருத்தி தாபனத்தின் சுனாமியின் பின்னரான சேவைகள் அளப்பரியது. எண்ணிலடங்காத அந்த பாரிய சேவைகளுக்கு, காரைதீவு மக்கள் சேர்ந்து வழங்கிய ஒரு சிறிய நன்றிக்கடனே இது.
இவ்வாறு அவுஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு மக்கள் இணைந்து ஏற்படுத்திய "ஒஸ்கார்"(Auskar ) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் தெரிவித்தார்.
மலையகத்தில் பேரிடரால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக நிவாரணப் பணிகளை ஒஸ்கார் நிறுவனம் செய்தது. அது தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் .
குறிப்பாக கண்டியை மையமாக வைத்து மலையகம் பூராக செயல்படுகின்ற மனித அபிவிருத்தி தாபனத்தின் பிரதம இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த் அன்றும் இன்றும் வந்து இன்னோரன்ன சேவைகளை செய்தார்கள் .
அதற்காக ஒரு நன்றிக்கடனாகவே நாங்கள் எமது இந்த உதவியை செய்தோம். இதற்காக பங்களிப்பை செய்த அனைத்து காரைதீவு மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த இரண்டு நாட்களாக எமது குழுவினர் மலையகம் சென்று மகியங்கன, கண்டி, கந்தானை, கம்பளை, பூண்டுலோயா, பதுளை, பசறை மடுல்சீம பட்டவத்தை ஆகிய பகுதிகளுக்குச் சென்று எங்களால் ஆன உதவிகளை வழங்கியிருந்தோம்.
இதற்காக தாயகத்தில் இருந்து கச்சிதமாக செயற்பட்ட பிரதம செயற்பாட்டாளர் சகா குழுவினருக்கும் நன்றிகள். என்றார்.










No comments