பலத்த மழை தொடர்பான எச்சரிக்கை!!
வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருகிறது, அதன் தாக்கம் காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
கனமழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் பலத்த மின்னல் காரணமாக ஏற்படும் எச்சரிக்கைகளைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் வானிலை ஆய்வு நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
குறித்த அறிவிப்பு இன்று (09) காலை 7.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ளது , நாளை (10) காலை 7.30 மணி வரை 24 மணி நேரத்திற்கு இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.
No comments