Column Left

Vettri

Breaking News

பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தினால் 250 மில்லியன் ரூபாய் நிவாரண நிதி வழங்கி வைப்பு!!




 பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் நிலையில்,  பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது.

இந்த நிதியை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்த நிகழ்வில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் சேனவி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

No comments