Column Left

Vettri

Breaking News

காரைதீவு மனித அபிவிருத்தி தாபன முன்னாள் ஊழியர்களின் நன்றிக்கடன் உதவிகள் மலையகத்தில் பகிர்ந்தளிப்பு




காரைதீவு மனித அபிவிருத்தி தாபன முன்னாள் ஊழியர்களின் நன்றிக்கடன் உதவிகள் மலையகத்தில் பகிர்ந்தளிப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து மனிதாபிமான உதவிகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. இம் மனிதாபிமான நிவாரணப் பணியானது அம்பாறை மாவட்ட மனித அபிவிருத்தி தாபனத்தில் ஆரம்ப காலம் தொடக்கம் பணியாற்றியவர்கள் மற்றும் வேள்வி பெண்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் முக்கியஸ்தர்களின் ஏற்பாட்டில். அவர்களினதும், உள்நாட்டிலும், மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளிலுள்ள இளைஞர்கள், சமூக நலன்விரும்பிகள்;, நன்பர்கள், கிராமமட்ட வலையமைப்புகள், பயனாளிகள், பொதுமக்கள், முன்பள்ளி ஆசிரியைகள், பெண் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஒன்றினைந்த பங்களிப்புடன் நடைபெற்றது. இம் மனிதாபிமான நிவாரண செயற்பாட்டின் ஊடாக 400 பெண்கள், மாணவிகளுக்கான அத்தியாவசிய ஆடைகள், சுகாதாரப் பொருட்கள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் பொதியிடப்பட்டு மனித அபிவிருத்தி தாபன தலைமை காரியாலயத்தின் ஊடாக கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களிலுள்ளவர்களுக்கு வழங்குவதற்கான அப் பொருட்கள் கடந்த வாரம் கண்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. இடைத்தங்கல் முகாம் அமைந்துள்ள இடங்களுக்கு செல்லும் பாதைகள் மண்சரிவு அபாய பிரதேசமாக இருந்ததால் எமது பணிக்குழு எல்லா பகுதிகளுக்கு செல்வது சாத்தியமற்று இருந்து. அதனால் அம்பாறை மாவட்ட மனிதாபிமான பணிக்குழுவும், மனித அபிவிருத்தி தாபன தலைமை காரியாலய உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து அலகுகளாக பிரிக்கப்பட்டு முதலாவதாக கண்டியிலிருந்து சுமார் 28 கிலோமீற்றர் உயர்ந்த மலைப்பிரதேசமான தெல்தோட்டை பிரதேச செயலக பிரிவிலுள்ள அப்பகலக எனும் அழகிய பெருந்தோட்டத்தினை அண்டிய இடைத்தங்கல் முகாமிலுள்ள 48 குடும்பங்களை சோர்ந்த 150க்கும் மேற்பட்டவர்களுக்கும் இவ் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. இம் மக்கள் குடியிருந்த வீடுகள் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்து முற்றாக தடைசெய்யப்பட்ட பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடதக்க விடயமாகும். ஏனைய நிவாரண பொருட்களை கண்டி மனித அபிவிருத்தி தாபன தலைமை காரியாலயத்தின் ஊடாக தேவையுடைய முகாம்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனித அபிவிருத்தி தாபன அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.றியாழ் தெரிவித்தார்.

No comments