ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் எழுச்சி முகாம் - 2025
ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் எழுச்சி முகாம் - 2025
ஆலையடிவேம்பு நிருபர்
வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் எழுச்சி முகாம் - 2025
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ,தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 2025 ஆம் ஆண்டுக்கான இளைஞர் எழுச்சி முகாம் முழுநாள் நிகழ்வாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (27) முழுநாள் நிகழ்வாக நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி என். ஜெயராஜ் நெறிப்படுத்தலிலும் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் ப.மிருஜன்; தலைமையிலும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதம ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் கலந்து கொண்டதுடன் அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.டபிள்யூ.எஸ். கங்கா சாகரிக்கா, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவி பணிப்பாளர் ஏ.முபாரக் அலி, மாகாணப் பணிமனை உதவிப் பணிப்பாளர் ஏ. ஹமீர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
'மனோநிலை | திறன்கள் | ஆளுமை | தலைமைத்துவம் | தேசத்தை கட்டியெழுப்பல்' |விளையாட்டு (Mindset | Skills | Character | Leadership | Nation Building) ஆகிய தலைப்புகளை உள்ளடக்கி, படைப்புதிறன்களை வளர்த்து கொள்ளல் என்ற தொணிப்பொருளில் எழுச்சி முகாம் ஆரம்பமானது.
நிகழ்வில்; 50 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளும் கலந்து கொண்டதுடன் பங்குபற்றிய இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு 'சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
No comments