கண்ணகிகிராமத்திற்கு செல்லும் பிரதான பாதையின் 430 மீற்றர் காபட் வீதியாக மாற்றம்
கண்ணகிகிராமத்திற்கு செல்லும் பிரதான பாதையின் 430 மீற்றர் காபட் வீதியாக மாற்றம்
ஆலையடிவேம்பு நிருபர்
வி.சுகிர்தகுமார்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் வீதிகள் காபட் இடப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக கண்ணகிகிராமத்திற்கு செல்லும் பிரதான பாதையின் 430 மீற்றர் வீதி வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக காபட் வீதியாக மாற்றம் பெற்று வருகின்றது.
7120000.00 நிதி ஒதுக்கீட்டின் புனரமைக்கப்பட்டு வரும் இவ்வீதியின் ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச இணைப்பாளர் ஆர்.ரதீசன் பிரதேச சபை உறுப்பினர் இராஜேந்திரன் பிரஜா சக்தி தலைவர் கோகுலன் உள்ளிட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட பிரஜா சக்தி தலைவர் கோகுலன்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
சுமார் 60 வருடங்களின் பின்னர் காபட் வீதியாக மாறும் கண்ணகிகிராமத்திற்கான வீதியினை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்த ஜனாதிபதிக்கும் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களுக்கும் நன்றி கூறினார்.
யார் எதுதான் சொன்னாலும் கடந்த அரசாங்கத்தினை விட மிக நேர்மையாகவும் உண்மையாகவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
No comments