இன்று சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
இன்று சிறுவர் கழக உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
( வி.ரி. சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக சமுர்த்தி மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு இணைந்து பிரதேச சிறுவர் கழகங்களிடையே நடாத்திய ஓவியம் மற்றும் பதாதை தயாரித்தல் போட்டியிலே பங்குபற்றிய சிறுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் இன்று (2025.12.26) வெள்ளிக்கிழமை பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
'ஆக்கபூர்வமான ஆக்கங்களை அறிவித்தலாக ஒப்படைத்தல்' என்னும் தொனிப் பொருளின் கீழ் சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு போதைப் பொருளுக்கு எதிரான மனநிலையினை உருவாக்குவதனை நோக்கமாக கொண்டு ஏற்பாடு செய்த இந்த ஓவியம் மற்றும் பதாதை தயாரித்தல் போட்டியில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிறுவர் கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் கே. உதயகுமார், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் எம். புவிதரன், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ. உதயசுதன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments