Column Left

Vettri

Breaking News

சுனாமி அனர்த்த நினைவு தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும்




சுனாமி அனர்த்த நினைவு தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் சுனாமி அனர்த்த நினைவு தின நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று (26) நடைபெற்றது. அரசாங்கத்தின் சுற்று நிருபங்களுக்கு அமைய இன்று காலை பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் ஒன்று கூடிய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். அத்தோடு அன்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிர்நீத்த மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் உயிரிழந்தவர்களுக்காவும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேநேரம் அனர்த்த காலங்களில் மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கான நிவாரணப்பொருட்களை சேகரிக்க உதவிய இளைஞர் கழகம் உள்ளிட்டவர்களுக்கும் நிவாரணப்பொருட்களை வழங்கிய பொதுமக்களுக்கும் பிரதேச செயலாளர் நன்றி கூறினார்.

No comments