Column Left

Vettri

Breaking News

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுடன் ஒருவர் கைது!!




 வெளிநாட்டு சிகரெட் தொகையொன்றை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றுகொண்டிருந்த இலங்கையர் ஒருவர் இன்று (21) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அவிசாவளை, எபலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய வர்த்தகர் ஒருவராவார்.

சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதி மற்றும் 03 பெட்டிகளுக்குள், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 'பிளாட்டினம்' ரகத்தைச் சேர்ந்த 42,000 சிகரெட்டுகள் அடங்கிய 210 சிகரெட் காட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளது.

குறித்த சிகரெட் தொகை விமான நிலைய அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி சுமார் 63 இலட்சம் ரூபா என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments