Column Left

Vettri

Breaking News

கடலலையில் சிக்கிய பொலிஸார் தங்கி இருந்த கட்டடம்




கடலலையில் சிக்கிய பொலிஸார் தங்கி இருந்த கட்டடம் பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த பொலிஸார் தற்காலிகமாக தங்கி இருந்த கட்டடம் கடலலையினால் காவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த கட்டடத்தில் நிலை கொண்டிருந்த பொலிஸார் அனைவரும் பாதுகாப்பாக அகற்றப்பட்டு வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார். அத்துடன் மருதமுனை பெரிய நீலாவணை கல்முனை சாய்ந்தமருத காரைதீவு கடற்கரை பகுதிகள் விரைவாக கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.இப்பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு காரணமாக தோணிகள் வள்ளங்கள் கரையை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன.மேலும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இப்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம் நீரோட்டத்தில் ஏற்ப்பட்டுள்ள திசை மாற்றம் கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

No comments