ஆலையடிவேம்பு பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் 9 வாக்குகளால் நிறைவேற்றம். எதிர்க்கட்சி எதிர்த்து வாக்களிப்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் 9 வாக்குகளால் நிறைவேற்றம். எதிர்க்கட்சி எதிர்த்து வாக்களிப்பு
வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் 9 வாக்குகளால் நிறைவேற்றம். எதிர்க்கட்சி எதிர்த்து வாக்களிப்பு
வரவு செலவுத்திட்டமானது நேற்றைய தினம் (10) தவிசாளர் ஆர்.தர்மதாசா தலைமையில் முன்மொழியப்பட்ட நிலையில் திட்டத்தில் போதியளவு திருப்தி இன்மை காரணமாக எதிர்த்து வாக்களித்தோம் என ஆலையடிவேம்பு பிரதேச சபை எதிர்கட்சி விளக்கம்.
நேற்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் கன்னி வரவு செலவு திட்டம் தவிசாளரினால் முன்வைக்கப்பட்டது அதனை தொடர்ந்து அதன் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு என்பன இடம் பெற்றது.
இதன் போது பாதீடு மீதான் வாக்கெடுப்பில் ஆதரவாக 09 வாக்குகளும் எதிராக 07 வாக்குகளும் பதிவாகியிருந்தது.
சுயேட்சையின் 02 மேலதிக வாக்குகளால் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சபையில் நிறைவேறியது.
எதிராக தேசிய மக்கள் சக்தியின் 07 உறுப்பினர்களும் வாக்களித்து இருந்தனர்.
தாம் ஏன் எதிராக வாக்களித்தோம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.ரதீசன்
மேற் கோள் ஆரம்பம்
'ஒரு சபை முழுமையாக இயங்க வேண்டுமாயின் சபையில் அமைக்கப் பெற்றுள்ள நிதி குழு ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும் நானும் நிதிக் குழு உறுப்பினர் ஆனால் நிதிக் குழுவிடம் ஆலோசனை பெறவில்லை'
'ஆலையடிவேம்பு பகுதியில் வருமானம் ஈட்டக்கூடிய வழிகளில் கலாச்சார மண்டபத்தின் ஊடக இந்த வருடம் கிடைக்கப்பெற்ற வருமானமாக அண்ணளவாக மூன்று லட்சம் தொடக்கம் 4 லட்சம் வரையான வருமானமே பெறப்பட்டுள்ளது இருக்கிறது'
'இவ்வாறு இருக்க எதிர்வரும் வருடத்தில் இருபத்தி ஐந்து லட்சம் வருமானமாக ஈட்டக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக வரவு செலவு திட்டத்தில் காட்டப்பட்டிருக்கிறது எனவே நாங்கள் இதனை முடியாத ஒரு மிகைப்படுத்தப்பட்ட வருமானமாகவே நாங்கள் கருதுகின்றோம்'
'ஆனால் கடந்தவருடம் சோலை வரி அறவிடுவதற்கான எந்த வித சட்டரீதியான முன் ஏற்பாடுகளும் இதுவரை செய்யப்படவில்லை'
'சோலை வரிக்கான எல்லைகள் தீர்மானிக்கப்படவில்லை இது போன்ற தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்படவில்லை அதன் மூலம் இருபத்தி ஐந்து லட்சம் வருமானம் வரும் என கட்டப்பட்டிருக்கிறது இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட வருமானமாக பார்க்கிறோம்'
'மூன்று லட்சத்திற்கும் இருபத்தி ஐந்து லட்சத்திற்கும் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் அதே போன்று வருடாந்த சோலை வரியாக இருபத்தி ஐந்து லட்சம் 2026 ஆம் வருடம் திரட்டலாம் என எதிர்பார்ப்பதாக காட்டப்பட்டிருக்கிறது'
'பெறப்படும் வருமானத்திற்கும் மொத்த செலவினத்துக்குமான வித்தியாசமாக அண்ணளவாக இரண்டாயிரம காட்டப்பட்டு இருக்கிறது'
'முன்பு சொன்னது போன்று மிகைப்படுத்தப்பட்டு காட்டப்பட்ட வருமானங்கள் எதிர்வரும் வருடம் கிடைக்க போவது இவ்வாறு இருக்கையில் சபையில் சமர்பித்திருக்கும் வரவு செலவுத்திட்டத்தில் வருமானத்தை மிகைப்படுத்தி காட்டி இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம்'
' அதே நேரத்தில் நிறைய வருமான மூலங்களை செயட்படுத்தாமல் அவ்வாரே வைத்திருக்கிறார்கள் இது வருமான இழப்பாக அமைகிறது உதாரணமாக வயலுகளுக்கான சோலை வரி அறவீடு ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட வயல் நிலங்கள் இருக்கின்றன ஒரு ஏக்கருக்கு வருடாந்த வருமானமாக 1,000 ரூபாய் அறவிடக்கூடியதாக இருந்தும் இது அறவிடப்படாமல் இருக்கிறது'
'இவ்வாறு அதிக வருமான ஈட்டும் விடயங்கள் செயல்படுத்த வேண்டிய தேவை இருந்தும் இவர்கள் செயல்படுத்தாமல் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது'
ஆரம்பமே ''முதல் கோணல் முற்றும் கோணல்'' என்பதுபோல் தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் அமைந்தது என்றார்.
No comments