Column Left

Vettri

Breaking News

இலங்கையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 640 ஆக உயர்வு




 இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தப் பேரழிவுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 211 பேர் காணாமல்போயுள்ளனர்.என அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று நண்பகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களின் விளைவாக, 5 ஆயிரத்து 713 வீடுகள் முழுமையாகவும், ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 805 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைப்பதற்காக நாடு முழுவதும் 847 பாதுகாப்பு மையங்கள் தற்போது இயங்குகின்றன.

இந்த மையங்களில் மொத்தமாக 26 ஆயிரத்து 103 குடும்பங்களைச் சேர்ந்த 82 ஆயிரத்து 813 பேர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


No comments