Column Left

Vettri

Breaking News

வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற சம்மாந்துறை வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு!




 ( வி.ரி. சகாதேவராஜா)

சம்மாந்துறை கல்வி வலய மட்ட மாணவர் பாராளுமன்ற நிகழ்வு  வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில்  நேற்று (7) சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர் பாராளுமன்ற  விடயத்துக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைரூஸ்கான் நெறிப்படுத்தினார்.

வலய பாடசாலைகளின் சிறப்பு மாணவர்கள் பங்கேற்ற இவ் வலய மட்ட பாராளுமன்ற அமர்வின் போது பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஏலவே பாடசாலை ரீதியாக மாணவர் பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.









No comments