வரவு செலவு திட்டம் வரலாற்றில் முன்மொழியப்படாத ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடியது
வி.சுகிர்தகுமார்
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வரலாற்றில் முன்மொழியப்படாத பல்வேறு திட்டங்களை உள்வாங்கியுள்ளதாகவும் ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடியது எனவும் கல்வி மற்றும் விவசாயத்திற்கான முக்கியத்துவத்தை அதிகம் வழங்கியுள்ளதெனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அனுசியா சேனாதிராஜா மற்றும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவரும் விபுலானந்தா இல்ல ஸ்தாபகருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபி;ள்ளை ஆகியோர்கள் கருத்து தெரிவித்தனர்.
வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இவ்வாறு கூறினர்.
இச்சிறந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நமது நாடு மிகவிரைவாக அபிவிருத்தி பாதையினை நோக்கி செல்லும் எனவும் இவ்வாறானதொரு சிறந்த வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்த ஜனாதிபதிக்கும் அரசுக்கும் நன்றி கூறுவதாக குறிப்பிட்டனர்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்வியல் கல்லூரி மாணவர்களின் நலன் விவசாயிகளின் எதிர்காலம் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைக்குறைப்பு உள்ளிட்ட விடயங்களும் உள்வாங்கப்பட்டுள்ளமை சிறப்பானதாகும்.
குறிப்பாக வலது குறைந்தவர்கள், சிறுவர்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அரசாங்க ஊழியர்களின் மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்திலும் அரசு அக்கறை செலுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் கல்வி தொழிநுட்பம் விவசாயம் ஆகிய விடயத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ள இச்சிறந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நமது நாட்டை எவ்வாறு வளம்மிக்க நாடாக மாற்றுவது எனும் விடயத்தில் மக்கள் கவனம் செலுத்துவது சிறந்தது எனவும் குறிப்பிட்டனர்.

No comments