Column Left

Vettri

Breaking News

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் நடாத்தும் சிறுவர் இல்லங்களுக்கான தீபாவளி கொண்டாட்டம்!!




 ஆலையடிவேம்பு நிருபர்

வி.சுகிர்தகுமார்        

 கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் நடாத்தும் சிறுவர் இல்லங்களுக்கான தீபாவளி கொண்டாட்டம் இன்று அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் இன்று (14) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஜெயராணியின் ஒருங்கிணைப்பில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் கே.சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சமூகசேவைத் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கே.இளங்குமுதன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் சுவாமி விபுலானந்தா இல்லத்தின் தலைவர் த.கயிலாயபிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமூக சேவைத்திணைக்களமானது இதுபோன்ற நிகழ்வுகளை இல்லங்களில் நடாத்தி இல்லங்களில் வாழ்கின்ற மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுடன் அவர்களது கலைத்திறமைகளை வெளிக்கொண்டுவரும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைவாக இன்று இல்லத்தின் மண்டபத்தில் மாணர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
இதன் பின்னராக தீபாவளி இனிப்பு பண்டங்கள் வழங்கி அனைவரும் மகிழ்ந்து உண்டனர்.
தொடர்ந்து அதிதிகளின் உரை இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசில்களும் புத்தாடை மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்;டன.

No comments