Column Left

Vettri

Breaking News

அவுஸ்திரேலிய கடல் வழி மார்க்கம் பற்றிய கட்டுரை ஓவியப் போட்டியில் செட்டிபாளைய மாணவர்கள் சாதனை




 ( வி.ரி.சகாதேவராஜா)

சமூகப் பொறுப்புடன் அவுஸ்திரேலியா அரசாங்கமும்  இலங்கை கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சும் இணைந்து செயற்படுத்திய சட்டவிரோதமாக அவூஸ்ரேலியாவிற்கு கடல் மார்க்கமாக  செல்வதற்கு முயற்சிப்பதை தடுக்கும் நோக்குடன்
ஒழுங்கு செய்யப்பட்ட கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலய மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
 
ஓவியப் போட்டியில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை 
பு.சஞ்ஜய்வன், ச.டருஸன், கு.விதுரங்கன் கட்டுரைப் போட்டியில் முறையே முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை சி.நிவோசனா,
கோ.டிலுக்சிகா, க.சதுஸ்சிகா ஆகியோர் பெற்றுள்ளனர்.

இப்பரிசளிப்பு நிகழ்வானது கொழும்பு  பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று முன்தினம் (15/11/2025) நடைபெற்றிருந்தது.

இப்போட்டிக்கான தயார்ப்படுத்தலினை சித்திரப் பாட ஆசிரியர் க. ரவிவர்மன் மேற்கொண்டிருந்தார்.





No comments