தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு-கர்ப்பமான சகோதரி-சம்மாந்துறையில் சம்பவம்
உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்திய நிலையில் கர்ப்பமான சகோதரி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமாரவின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கல் வாடியில் வேலை செய்வதுடன் தாய் இல்லத்தரசியாக இருக்கின்றார்.இந்நிலையில் இச்சம்பவம் 4 வருடங்களாக இடம்பெற்றுள்ளமை ஆரம்ப விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சகோதரனுக்கு சுமார் 11 வயது இருக்கும் போது சகோதரிக்கு 18 வயதாகிய நிலையில் இச்சம்பவம் ஆரம்பமாகியுள்ளது.
இச்செயலுக்கு உடன்பிறந்த தம்பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களினால் மிரட்டி இச்செயலை தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக உடன்பிறந்த சகோதரி மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது 22 வயதான குறித்த சகோதரி வயற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்பட்ட நிலையில் முறைகேடான உறவினால் 2 மாத கர்ப்பம் தரித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று (5) மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments