பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு
பாறுக் ஷிஹான்
நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி மாணவர் இருக்கைகள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வலயக் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நற்பிட்டிமுனை கமு / கமு / லாபிர் வித்தியாலய அதிபர் சி.எம் நஜீப் Friends Circle - Natpiddimunai சமூக சேவை அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஒரு தொகுதி மாணவர் இருக்கைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு செவ்வாய்க்கிழமை(4) பிரதம அதிதியாக Saro farm pvt. Ltd.உரிமையாளரும் மருதமுனை வர்த்தக சங்கத்தின் செயலாளரும் மருதமுனை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழு அமைப்பாளருமான தொழிலதிபர் எம்.எச்.எம் தாஜுதீன் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான இருக்கைகளையும் கையளித்தார்.
மேலும் கோட்ட மட்ட விளையாட்டு போட்டிகளில் திறமை காட்டிய மாணவர்கள் அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மேலும் பாடசாலை சமூகத்தினால் பிரதம அதிதிக்கு பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வுக்கு பிரதி அதிபர் ஏ.ஜி தஸ்லிமா உட்பட நண்பர்கள் வட்டம் தலைவர் நிரோஸ் நண்பர்கள் வட்டம் செயலாளர் றியாஸ் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.





No comments